எமதுவாழ்நாளில் ஆயிரக்கணக்கில் விளம்பரங்களைப் பார்த்தேயாகவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தும் விளம்பர யுகம் இது.
அவற்றில் சில மனதில் பதிந்து விடுகின்றன.
அப்படி மனதில் பதியும் விளம்பரங்களால் மட்டும் அதன் நோக்கம் நிறைவேறுவதில்லை. அதில் காட்டப்படும் பொருளும் மனதில் பதிந்து விடுவதே உண்மையான வெற்றி..
ஆனாலும் பல விளம்பரத் தயாரிப்பாளர்கள் இதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
ஒரு சில மக்கள் மனதில் பதிந்து விட்டாலும் அது என்ன பொருளுக்கான விளம்பரம் என்பதை பார்வையாளர்கள் மறந்துவிடுகிறார்கள்
இங்கு சில விளம்பரங்களைப்பார்க்கலாம். இதில் எத்தனை தங்கள் நோக்கத்தை அடைந்துள்ளன என்பதை நீங்களே தீர்மானியுங்கள்
இங்கிலாந்தைச் சேர்ந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் 900 பவுண்ஸ்களை
(இலங்கை மதிப்பில் அண்ணளவாக 1 88,000 ரூபாய்கள், இந்திய மதிப்பில் 61 515 ரூபாய்கள்) இறைத்து தனது பண்ணையை மேம்படுத்தியிருக்கிறான் அதன் மூலம் நல்ல விளைச்சலையும் பெற்றுள்ளான்.
“சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்ற பழமொழியை பொய்ப்பித்து விட்டானோ என்று யோசிக்காமல் தொடர்ந்து படியுங்கள்.
அதிகளவானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான Facebook இல் இப்போது பிரபலமாக இருப்பது Farmville என்ற அறுவடை விளையாட்டு (?)
இதற்கு அடிமையாகிய 12 வயதான இங்கிலாந்துச் சிறுவன் தன்னுடைய தாயாருடைய கடனட்டையைப் (Credit card) பயன்படுத்தி 600 பவுண்சினையும் தன்னுடைய சேமிப்பிலிருந்து 288 பவுண்சினையும் Farmville இற்காக செலவிட்டுள்ளான்.
இது பற்றி அறிந்த தாயார் HSBC வங்கியைத் தொடர்பு கொண்டு பணத்தை மீளப் பெறமுடியுமாவென வினவியிருக்கிறார். அவர்கள் சொன்ன பதில் உங்கள் மகன் மீது குற்றம் சுமத்தி புகார்கொடுக்கும் பட்சத்தில் பணம் மீளக்கிடைக்கும் என்றும் ஆனால் சிறுவன் பொலிஸ் விசாரணையை எதிர்நோக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தாயாரோ அவ்வாறு செய்யவில்லை
அவர் Zynga (Farmville உருவாக்கியவர்) மீதோ Facebook மீதோ குற்றம் சுமத்தவில்லை. இது தனக்கு ஒரு எச்சரிக்கை என்றே கருதுகிறார்.
நம்மடையேயும் பலர் இவ்வாறு Credit Card மூலம் பணம் செலுத்தி Farmville விளையாடுபவர்கள் இருக்கிறார்கள்.
(பலரை எமக்குத் தெரியும்)
நம்மவர்கள், Farmville விளையாடாதவர்களை, அல்லது அது பற்றிய அறிவில்லாதவர்களைப் புழுக்களைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள்.
யார் தொலைபேசியில் பேசினாலும் விவாதிக்கும் முக்கிய விடயமாக இது இருக்கிறது. தமது சார்பில் பண்ணையைப் பராமரிப்புச்செய்ய உதவிகோருபவர்களின் தொல்லையும் இருக்கிறது. :)
நேரத்தை வீணடித்து ஒருவிதபோதையோடு பண்ணை வளர்த்து விளையாடுபவர்கள் எப்போதுதான் விழித்துக்கொள்வார்கள்???????
இந்தப் பதிவைப் படித்து விட்டு “பொறாமை பிடித்தவன்” என்று பட்டஞ்சூட்டுபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் :) :)
அண்மையில் பார்க்கக் கிடைத்த ஒரு வீடியோதான் இது
(பலர் இதனை முன்பே பார்த்திருக்கலாம்)
இது ஒரு புதிய இசைப் பரிசோதனையாக 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி இந்தியாவில் புதுச்சேரியில் நடைபெற்ற Tamil Voodooஎன்ற இசை நிழ்ச்சி.
சுசீலா ராமன் ஏற்பாடு செய்திருந்த இந்த இசை நிகழ்ச்சியில் அவரோடு இணைந்து கோவை கமலாவும் ஆடிப்பாடி இருக்கின்றார்.
விடயம் என்னவென்றால் இந்தப்பாடலைப் பார்க்கும்போது எதிரெதிர் கருத்துக்கள் தோன்றுகின்றன.
- தமிழைச் சர்வதேச இசையுடன் கலந்து கொடுக்கின்றார்கள் என்பது பெருமையாக இருக்கிறது.
- இசைக்கலைஞர்கள் புகழ்பெற்ற மேலைத்தேசக் கலைஞர்கள். அவர்களோடு இணைந்து உள்ளூர் கலைஞர்கள் தஞ்சாவூர் தப்பாட்டம் மேட்டுப்பாளையம் துடும்பாட்டம் என்பன கலக்கியுள்ளன.
- பாடலைப்பாடும் விதம் மற்றும் இரசிகர்களைக் கவரும் விதம் என்பன நன்றாக உள்ளன.
மறுபக்கத்தில்
- இவர்களின் சோதனை முயற்சியில் முருகன் பாடல் படும் பாடு.....
- மற்றும் ஒரு பக்திப் பாடலை சோதனைக்கு எடுத்திருப்பது.......
- அந்தப்பாடலுக்கு சம்பந்தமில்லாமல் மேடையில் போடும் ஆட்டம்
போன்றவை கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றன.
நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்??
1.வரிசை விதி-
நீங்கள் நிற்கும் வரிசையை மாற்றினால் நீங்கள் விட்டுச் சென்ற வரிசை நீங்கள் இப்போது நிற்கும் வரிசையை விட வேகமாக நகரும்.
2.தொலைபேசி விதி
நீங்கள் தற்செயலாக பிழையான இலக்கத்தைச் சுழற்றினால் ஒரு போதும் அந்த இலக்கம் வேறு அழைப்பில் இருக்காது. உடனடியாகவே உங்களுக்கு இணைப்புக் கிடைத்து விடும்.
3.இயந்திர பழுதுபார்ப்பு விதி-
உங்கள் கைகள் முழுவதும் கிறீஸ் பட்ட பின்னர் உங்கள் முதுகு அரிக்கத் தொடங்கும்.
4.தொழிற்சாலை விதி-
நீங்கள் தவறவிட்ட எந்தவொரு திருத்தும் கருவியும் எப்போதுமே எடுக்க முடியாத ஒரு இடத்தில் உருண்டு சென்று தஞ்சமடைந்திருக்கும்.
5.பொய்க்காரண விதி-
நீங்கள் வேலைக்கு பிந்தி வந்ததற்கு காரணம் உங்கள் வாகன ரயர் ஒட்டையானது என நீங்கள் உங்கள் முதலாளியிடம் சொல்வீர்களாயின் அடுத்த நாள் உண்மையாகவே உங்கள் ரயர் ஓட்டையாகும்.
6.குளிப்பு விதி-
நீங்கள் குளிக்கத் தொடங்கி உங்கள் உடல் முழுவதும் நீரால் நனைந்த பின்னர் உங்கள் தொலைபேசி சிணுங்கும்.
7.சந்திப்பு விதி-
உங்களுக்கு தெரிந்த ஒருவரை சந்திப்பதற்கான நிகழ்தகவானது அந்த நபர் உங்களை யாரொடு சேர்த்து காணக் கூடாது என நினைக்கிறீர்களோ அவரோடு இருக்கும் போது அதிகம்.
8.வெளிப்படுத்துகை விதி-
ஒரு இயந்திரம் தொழிற்படவில்லை என ஒருவருக்கு நிரூபிக்க முற்படுகையில் அந்த இயந்திரம் தொழிற்பட ஆரம்பிக்கும்.
9.திரையரங்க விதி-
நீங்கள் திரையரங்கில் வாசல் ஓரத்தில் அமர்ந்திருக்கையில் உங்கள் வரிசையில் கடைசியாக ஓரத்தில் இருப்பவர்கள் அனைவரும் படம் ஆரம்பித்து நீங்கள் இரசிக்க ஆரம்பித்த பின்னரே வருவார்கள்.
10.கோப்பி விதி-
உங்கள் அலுவலகத்தில் சூடான கோப்பி ஒன்றை பருக அமரும் தருணத்தில் தான் உங்கள் முதலாளி உங்களை அழைத்து பெரிய வேலையொன்றை தருவார். கோப்பி சூடாறி குளிரும் வரையாவது அந்த வேலை கட்டாயம் நீடிக்கும்.
(ஒரு நண்பன் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து..............)
Twitter மற்றும் மின்னஞ்சல் என்பவற்றைப் பயன்படுத்தி தலாய்லாமாவின் அலுவலகத்தின் அதிமுக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் இந்திய அலுவலகங்களில் வெளியாரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் நோட்டமிடப்பட்டதாகவும் கனேடிய ஆய்வாளர் Ron Deibert தெரிவித்துள்ளார்.அவற்றுள் கனடாவுக்கான விசா வண்ணப்பங்களும் திருடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆயினும் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜியாங் ஜு, இப்படிப்பட்ட செய்திகளைத் தாம் அடிக்கடி கேட்க நேர்வதாகவும் என்ன காரணத்திற்காக இந்தச்செய்திகளோடு சீனாவைத் தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.
இது தொடர்பாக இதுவரை இந்தியா கருத்து எதனையும் வெளிடவில்லை. மாறாக இவ்வாரம் சீனாவில் நடைபெறும் சீன இந்திய நட்பின் அறுபதாண்டு விழாக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா சீனா செல்கிறார் :)
Facebook நிறுவனம் Divvyshot இனை கையகப்படுத்தவுள்ளது. இது பற்றிய அறிவிப்பினை Divvyshot நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இணையப் பாவனையாளர்களிடையே கடந்த ஒருவருடமாகப் பிரபலமான online photo album ஆக இருக்கும் Divvyshot தற்போது புதியபாவனையாளர் பதிவை முடக்கியுள்ளது. 6 வாரங்களில் இந்த இணைத்தளத்திற்கு செல்வோர் Facebook இற்குத் திருப்பிவிடப்படுவர். ஏற்கனவே சமூகவலைத்தளத்தில் முதன்மை வகிக்கும் Facebook இல் மாதாந்தம் 3 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. Divvyshot இனுடைய உதவியுடன் நீங்கள் Facebook இல் பதிவேற்றும் படங்கள் அதிக தரத்துடன் திகழப்போகிறது. Divvyshot சான்பிரான்சிஸ்கோவைச்சேர்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.