அண்மைக் காலமாக கணினி மூலமான மோசடிகளுடன் சீனா தொடர்புபட்டிருப்பதான செய்திகள் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன. அண்மையில் தன்னுடைய தளத்தினைப் பயன்படுத்தி சீனா தகவல் திருட்டில் ஈடுபட முனைந்தது என்று Googleநிறுவனம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சீனாவிலிருந்து Googleவெளியேறுவது பற்றிய செய்திகளும் வந்துகொண்டிருக்கும் நிலையில் கனேடிய நிபுணர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிட்டுள்ள ஆய்வுத்தகவல் சீனாவை மேலும் சிக்கலுக்கு ஆளாக்கியுள்ளது.

Twitter மற்றும் மின்னஞ்சல் என்பவற்றைப் பயன்படுத்தி தலாய்லாமாவின் அலுவலகத்தின் அதிமுக்கிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் இந்திய அலுவலகங்களில் வெளியாரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் நோட்டமிடப்பட்டதாகவும்  கனேடிய ஆய்வாளர் Ron Deibert தெரிவித்துள்ளார்.அவற்றுள் கனடாவுக்கான விசா வண்ணப்பங்களும்  திருடப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜியாங் ஜு, இப்படிப்பட்ட செய்திகளைத் தாம் அடிக்கடி கேட்க நேர்வதாகவும் என்ன காரணத்திற்காக இந்தச்செய்திகளோடு சீனாவைத் தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.

இது தொடர்பாக இதுவரை  இந்தியா கருத்து எதனையும் வெளிடவில்லை. மாறாக இவ்வாரம் சீனாவில் நடைபெறும் சீன இந்திய நட்பின் அறுபதாண்டு விழாக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா சீனா செல்கிறார் :)

Leave a Reply

சொல்ல நினைப்பவற்றை எழுதுங்கள்

Main Menu

ORUPAKKAM. Powered by Blogger.