Facebook
நிறுவனம் Divvyshot இனை கையகப்படுத்தவுள்ளது. இது பற்றிய அறிவிப்பினை Divvyshot நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இணையப் பாவனையாளர்களிடையே கடந்த ஒருவருடமாகப் பிரபலமான online photo album ஆக இருக்கும் Divvyshot தற்போது புதியபாவனையாளர் பதிவை முடக்கியுள்ளது. 6 வாரங்களில் இந்த இணைத்தளத்திற்கு செல்வோர் Facebook இற்குத் திருப்பிவிடப்படுவர். ஏற்கனவே சமூகவலைத்தளத்தில் முதன்மை வகிக்கும் Facebook இல் மாதாந்தம் 3 பில்லியன் படங்கள் பதிவேற்றப்படுகின்றன. Divvyshot இனுடைய உதவியுடன் நீங்கள் Facebook இல்  பதிவேற்றும் படங்கள் அதிக தரத்துடன் திகழப்போகிறது. Divvyshot சான்பிரான்சிஸ்கோவைச்சேர்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

சொல்ல நினைப்பவற்றை எழுதுங்கள்

Main Menu

ORUPAKKAM. Powered by Blogger.