இங்கிலாந்தைச் சேர்ந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் 900 பவுண்ஸ்களை
(இலங்கை மதிப்பில் அண்ணளவாக 1 88,000 ரூபாய்கள், இந்திய மதிப்பில் 61 515 ரூபாய்கள்) இறைத்து தனது பண்ணையை மேம்படுத்தியிருக்கிறான் அதன் மூலம் நல்ல விளைச்சலையும் பெற்றுள்ளான்.
“சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்ற பழமொழியை பொய்ப்பித்து விட்டானோ என்று யோசிக்காமல் தொடர்ந்து படியுங்கள்.
அதிகளவானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான Facebook இல் இப்போது பிரபலமாக இருப்பது Farmville என்ற அறுவடை விளையாட்டு (?)
இதற்கு அடிமையாகிய 12 வயதான இங்கிலாந்துச் சிறுவன் தன்னுடைய தாயாருடைய கடனட்டையைப் (Credit card) பயன்படுத்தி 600 பவுண்சினையும் தன்னுடைய சேமிப்பிலிருந்து 288 பவுண்சினையும் Farmville இற்காக செலவிட்டுள்ளான்.
இது பற்றி அறிந்த தாயார் HSBC வங்கியைத் தொடர்பு கொண்டு பணத்தை மீளப் பெறமுடியுமாவென வினவியிருக்கிறார். அவர்கள் சொன்ன பதில் உங்கள் மகன் மீது குற்றம் சுமத்தி புகார்கொடுக்கும் பட்சத்தில் பணம் மீளக்கிடைக்கும் என்றும் ஆனால் சிறுவன் பொலிஸ் விசாரணையை எதிர்நோக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தாயாரோ அவ்வாறு செய்யவில்லை
அவர் Zynga (Farmville உருவாக்கியவர்) மீதோ Facebook மீதோ குற்றம் சுமத்தவில்லை. இது தனக்கு ஒரு எச்சரிக்கை என்றே கருதுகிறார்.
நம்மடையேயும் பலர் இவ்வாறு Credit Card மூலம் பணம் செலுத்தி Farmville விளையாடுபவர்கள் இருக்கிறார்கள்.
(பலரை எமக்குத் தெரியும்)
நம்மவர்கள், Farmville விளையாடாதவர்களை, அல்லது அது பற்றிய அறிவில்லாதவர்களைப் புழுக்களைப் பார்ப்பது போலப் பார்க்கிறார்கள்.
யார் தொலைபேசியில் பேசினாலும் விவாதிக்கும் முக்கிய விடயமாக இது இருக்கிறது. தமது சார்பில் பண்ணையைப் பராமரிப்புச்செய்ய உதவிகோருபவர்களின் தொல்லையும் இருக்கிறது. :)
நேரத்தை வீணடித்து ஒருவிதபோதையோடு பண்ணை வளர்த்து விளையாடுபவர்கள் எப்போதுதான் விழித்துக்கொள்வார்கள்???????
இந்தப் பதிவைப் படித்து விட்டு “பொறாமை பிடித்தவன்” என்று பட்டஞ்சூட்டுபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் :) :)
Categories:
Facebook,
FarmVille,
இங்கிலாந்து,
கடனட்டை,
கணினி மற்றும் தொடர்பாடல்,
சிறுவன்
Main Menu
ORUPAKKAM. Powered by Blogger.
இது போதையெல்லாம் இல்லை. ஒரு விளையாட்டு என்று தான் நானும் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் இப்போதுதான் உண்மை தெரிகிறது. பணம் கொட்டி பண்ணையை வளர்ப்பது பற்றி!..
super..