இதுவரை உலகின் காரம் கூடிய மிளகாயாக இருந்தது Bhut Jolokia என்ற இந்திய மிளகாய். இதனைப் பேய் மிளகாய் (Ghost Chilli ) எனவும் அழைப்பர். இதனை உட்கொள்வது என்பது சாதனைக்குரியதொன்றாகவே பார்க்கப்படுகிறது. Youtube தளத்தில் இது தொடர்பான விஷப்பரீட்சைகளைக் காணலாம்.

ஆனால் இப்போது Bhut Jolokia வை மிஞ்சியிருக்கிறது Infinity எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய வகை மிளகாய். இந்தப் புதிய வகை மிளகாயை புசித்துப்பார்ப்பவர்களுக்கு வாய் அவிதல் மற்றும் எரிவு போன்றவை வருமென்பது உத்தரவாதத்துக்குரியது. அதுவும் மிக சக்திமிக்க மருந்துகள் கொண்டும் இதனைத் தடுக்கமுடியாத அளவுக்கு காரம்மிக்கது. இம் மிளகாயை Warwick பல்கலைக்கழகம் Scoville அளவின்படி 1,067,286 ஆகத் தரப்படுத்தியுள்ளது. Scoville அளவு என்பது காரமான பொருட்களின் சூட்டினை அளவிடும் அலகு. இவ்வளவின் படி சாதாரண மிளகாய் ஒன்று 2500 தொடக்கம் 5000 ஆக வரையறுக்கப்படுகின்றது.

Grower Woody Woods மற்றும் Matt Simpson ஆகியோர் பல்லின மிளகாய்களைக் கலப்பினமுறையில் இனப்பெருக்கம் செய்து இதனை உருவாக்கியுள்ளனர். Infinity மிளகாய் விதைகளை இவ்வருடத்திலேயே சந்தைப்படுத்தும் திட்டம் இவர்களிடம் இருக்கிறது.

யார் யாரெல்லாம் வாயைக்கொடுத்துப் புண்ணாக்கப் போகிறார்களோ??

Leave a Reply

சொல்ல நினைப்பவற்றை எழுதுங்கள்

Main Menu

ORUPAKKAM. Powered by Blogger.