Blackberry பாவனையாளர்கள் ஐவரில் இருவர் தங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் Apple iphone க்கு மாறவிருப்பதாக மிக அண்மைய ஆய்வொன்றின் பிரகாரம்தெரிவித்திருக்கிறார்கள். முப்பத்தொன்பது வீதமான Blackberry பாவனையாளர்கள் இவ்வாறு உடனடிச்சந்தர்ப்பமொன்றை எதிர்பார்த்திருப்பதாகக் கூறுகின்றனர். கூகுளின் Android பாவனையாளர்களில் 87 வீதமானவர்கள் தொடர்ந்தும் அதனையே பாவிக்க விரும்புவதாகக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் Apple iphone பாவனையாளர்களில் 97 வீதமானோர் தங்களின் முதல்தெரிவாக Apple iphone ஐக் குறிப்பிட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இவ்வாறான போக்கினால் வெகுவிரைவிலேயே உலகின் அதிவிருப்ப கையடக்க சாதன நிலையிலிருந்து Blackberry காணாமல்போகலாம். ஆயினும் 2011ம் ஆண்டளவில் Blackberry யினை Apple பின் தள்ளிவிடும் என ஏலவே சில ஆய்வுகள் தெரிவித்துள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
அதிபிரபலமாக இருந்து திடீரெனக் காணாமல்போன ஓடியோ கசட், VHS, Pager போன்றவைபோல Blackberry யும் சந்தையிலிருந்து காணாமல்போகலாம்.
Categories:
அறிவியல்,
தொழில்நுட்பம்
