1) வயிற்றில் பசி ஏற்படும் போது ஹைட்ரோகுளோரிக் அமிலம் (Hydrochloric acid) உற்பத்தியாகிறது. இந்த அமிலமானது சுரக்கிற நேரத்தில் ஏதாவது உணவுப் பொருளைச் சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடாமல் வெறும் வயிறாக விட்டு விட்டால், இந்த அமிலம் வயிற்றில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனை (Mucous membrane) அரிக்க ஆரம்பிக்கிறது. நாளடைவில் அரித்த இடங்களில் ஓட்டை விழுந்து புண்களாக மாறுகின்றன.
2) நேரம் தவறாமல் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும், பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடனோ அல்லது வேலை, வேலை என்றோ அலைந்து கொண்டே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். இதனால் வயிற்றில் புண்கள் உருவாகி விடும்.
3) அதிகமான காரம், அல்லது கொழுப்புச்சத்து உள்ள பொருட்களை உண்ணக்கூடாது. கூடுமான வரை அவற்றைத் தவிர்ப்பது வயிற்றுப் புண்கள் வராமல் இருக்க வழி வகுக்கும்.
4) குடும்பப் பிரச்சினைகளையோ, அல்லது தன்னைப் பற்றியோ வீணான, அதிகமான மனக்கவலை (Stress) கொள்வது வயிற்றில் புண்கள் ஏற்பட முக்கியக் காரணம். ஒருவர் அதிகமாகச் சிந்திக்கும் போது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் அதிகமாகச் சுரக்கிறது. இதன் காரணமாகவும் புண்கள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே வீண் கவலைகளுக்கு மனதில் எப்போதும் இடமே கொடுக்கக்கூடாது.
5) மது அருந்தும் பழக்கம், புகைப் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்த வேண்டும்., நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
இரைப்பையில் ஏற்படும் அல்சரை கேஸ்ட்ரிக் அல்சர் என்கின்றனர். இரைப்பைக் கோளத்தில் உண்டாகும் அல்சர் பெப்டிக் அல்சர் அல்லது டியோடினல் அல்சர் எனப்படுகிறது.
உண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் அதிகமான வயிற்றுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்தால் தான் குறையும் நிலைமை என்றால் அது கேஸ்ட்ரிக அல்சர். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு பசி எடுத்தாலும் உண்ண முடியாத நிலை என்பதால் உடல் எடை மோசமாகக் குறையும்.
பெப்டிக் வகை அல்சர் உள்ளவர்களுக்கும் சாப்பிட்ட உடனேயே தாங்க முடியாத வயிற்று வலி ஏற்படும். இது போன்ற பாதிப்பு சிறுகுடலிலும் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
இதற்கு முக்கியக் காரணம், ஓயாத காபிப் பழக்கம் தான். இதில் உள்ள காபின் என்ற விஷப் பொருள் குடலைப் பாதிக்கின்றன.
ஜீரணமாகாமல் தங்கி நிற்கும் புரதச் சத்துக்களும், வயிற்றுப்பகுதியில் அதிக அமிலம் உற்பத்தியாவதும் கூட இதற்குக் காரணம் ஆகலாம்.
அதிகமாக யோசனை செய்வதால் மூளையிலிருந்து வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்பட்டு அமில உற்பத்தி அதிகரிக்கிறது.
பூசணி, பெங்களூர் கத்திரி (சௌ சௌ) சுரைக்காய், வெள்ளரி போன்ற உடலுக்குக் குளிர்ச்சி தரும் காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Categories:
Main Menu
ORUPAKKAM. Powered by Blogger.