
ராணுவத்தில் கொலைப்படைக்கு ஆள் தேர்வு நடந்து கொண்டிருந்தது.
இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தேர்வுக்கு வந்திருந்தார்கள்.
தேர்வு நடத்தியவர் முதல் நபரை அழைத்தார், “கேள்வி கேட்காம சொன்னதைச் செய்ய வேண்டியது ஒரு ராணுவக்காரனுக்கு ரொம்ப அத்தியாவசியத் தேவை. யாரைக் கொலை பண்ணச் சொன்னாலும் பண்ணனும். அதோ அந்த அறையிலே உங்க மனைவி இருக்காங்க. போய் ஷூட் பண்ணிட்டு வாங்க.” என்று துப்பாக்கியைக் கொடுத்தார்.
அந்த ஆளோ “அடப்போங்கடா நீங்களும் உங்க ராணுவமும்” என்று கிளம்பி விட்டான்.
இரண்டாவது ஆளை அழைத்து அதே மாதிரி சொல்லி, துப்பாக்கியையும் கொடுத்தார்.
அவர் அறைக்குள் போகிற வரை துணிவாகத்தான் போனார். ஆனால் உள்ளே போன பிறகு பதட்டத்தோடு வெளியே வந்து விட்டார்.
“ம்ம் ஹூம் என்னால முடியாதுங்க”
மீதமிருந்த பெண்ணை அழைத்தார் தேர்வாளர்.
“அவங்க ரெண்டு பேருக்கும் சொன்னதை கவனிச்சிருப்பீங்க. புதுசா சொல்ல ஒண்ணுமில்லை. அறைக்குள்ளே உங்க கணவர் உட்கார்ந்திருக்கார். போய் ஷூட் பண்ணிட்டு…..”
தேர்வாளர் முடிக்குமுன் துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு விடு விடுவென்று நடந்தாள் அந்தப் பெண்.
அறைக்கதவு சாத்தப் படுமுன் துப்பாக்கி வெடிக்க ஆரம்பித்தது. குண்டுகள் தீர்ந்ததும் ஓரிரு விநாடிகள் அமைதி. அப்புறம் துரத்தல், அடிதடி அலறல்,நாற்காலி கட்டை மளுக் மளுக்கென்று உடைகிற சத்தம்.
கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் வெளியே வந்தாள்.
“அடேங்கப்பா.. குண்டு தீர்ற வரைக்கும் சுட்டிருக்கீங்க. உங்களை மாதிரி ஆள்தான் எங்களுக்குத் தேவை. உங்களை செலக்ட் பண்ணியாச்சு”
“நன்றி சார்”
“நல்ல வேளை வெத்துத் தோட்டாவை போட்டுக் கொடுத்தோம். நிஜத் தோட்டாவா இருந்தா உங்க கணவர் சல்லடையா போயிருப்பாரு”
“அடக்கடவுளே, வெத்துத் தோட்டான்னு முன்னாலேயே சொல்லக் கூடாதா?”
“ஏன், என்ன ஆச்சு?”
“உங்களுக்கே தெரியாம இந்த தப்பு நடந்துடிச்சோன்னு அந்தாளை நாற்காலியாலே அடிச்சிக் கொன்னுட்டேன்”
இணையத்தில் படித்து ரசித்தது.
Categories:
சிரிக்க
Main Menu
ORUPAKKAM. Powered by Blogger.