அண்மையில் பார்க்கக் கிடைத்த ஒரு வீடியோதான் இது
(பலர் இதனை முன்பே பார்த்திருக்கலாம்)
இது ஒரு புதிய இசைப் பரிசோதனையாக 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் திகதி இந்தியாவில் புதுச்சேரியில் நடைபெற்ற Tamil Voodooஎன்ற இசை நிழ்ச்சி.
சுசீலா ராமன் ஏற்பாடு செய்திருந்த இந்த இசை நிகழ்ச்சியில் அவரோடு இணைந்து கோவை கமலாவும் ஆடிப்பாடி இருக்கின்றார்.
விடயம் என்னவென்றால் இந்தப்பாடலைப் பார்க்கும்போது எதிரெதிர் கருத்துக்கள் தோன்றுகின்றன.
- தமிழைச் சர்வதேச இசையுடன் கலந்து கொடுக்கின்றார்கள் என்பது பெருமையாக இருக்கிறது.
- இசைக்கலைஞர்கள் புகழ்பெற்ற மேலைத்தேசக் கலைஞர்கள். அவர்களோடு இணைந்து உள்ளூர் கலைஞர்கள் தஞ்சாவூர் தப்பாட்டம் மேட்டுப்பாளையம் துடும்பாட்டம் என்பன கலக்கியுள்ளன.
- பாடலைப்பாடும் விதம் மற்றும் இரசிகர்களைக் கவரும் விதம் என்பன நன்றாக உள்ளன.
மறுபக்கத்தில்
- இவர்களின் சோதனை முயற்சியில் முருகன் பாடல் படும் பாடு.....
- மற்றும் ஒரு பக்திப் பாடலை சோதனைக்கு எடுத்திருப்பது.......
- அந்தப்பாடலுக்கு சம்பந்தமில்லாமல் மேடையில் போடும் ஆட்டம்
போன்றவை கொஞ்சம் சங்கடமாக இருக்கின்றன.
நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்??
Categories:
Tamil Voodoo,
கோவை கமலா,
சுசீலா ராமன்,
பக்திப் பாடல்,
வீடியோ
பாடல் இரசிக்கும்படி உள்ளது
முயற்சி புதுமையாக இருந்தாலும் வரவேற்க கூடியதாய் இல்லை அதில் உள்ள நடணம் ஒரு பக்தி பாடலுக்கான முறையில் இல்லை சில இடங்களில் ஆபாச வளைவுகள் இதை மற்ற நாட்டினர் பார்க்கும் போது தமிழர்கள் இப்படிதான் ஆட்டம் போட்டு கடவுளை வழிபடுகிறார்கள் என நினைக்க கூடும் அந்த கண்ணோட்டத்துடனேயே பார்க்க வைத்து விடும்
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி ஓங்கியுள்ள நேரத்தில் பிற்காலத்தில் இந்த பாடலும் நமக்கு ஒரு ஆவணப்படுத்துதலாக மாறும் அப்பொழுது நம் சந்ததி நினைக்கும் இப்படித்தான் போல நம் முன்னோர்கள் இருந்திருக்கிறார்களென
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
அருவருப்பாக இருக்கிறது. கே.பி.எஸ். குரலில் பாடுவதாலேயே பாடகி கோவை கமலாம்மா மீது மதிப்பு வைத்திருந்தேன். அது இந்தப் பாடல் காட்சியைப் பார்த்த பின்பு தொலைந்தது. உடன் ஆடிப்பாடும் அந்தம்மாவும் ஏதோ மதுவின் மயக்கத்தில் ஆடுகிறவர் போன்றுதான் தெரிகிறார். கலாசார சீரழிவுக்கு நித்யானந்தர்களும் இப்படியான பேர்வழிகளும் போதும். நம்மவர்களே இத்தனை யோக்கியமாக இருக்கும்போது, ஓவியர் எம்.எஃப்.ஹுசேன் பற்றி விமர்சிக்க நமக்கு என்ன வாயிருக்கிறது?
இவ்வாறு வெளிப்படையாக எழுதத் தோன்றினாலும் வருகையாளர்களின் கருத்துக்களை அறிவதற்காகத்தான் மேலோட்டமாக தந்திருந்தேன்.
இந்த தைரியத்தை அவர்களுக்கு வழங்கியது தமிழ்நாட்டின் தற்போதைய நிலை. தொலைக்காட்சிகளி்ல் தமிழும் இல்லை
தமிழ்ப் பண்பாடும் இல்லை
தமிழில் கதைப்பவர்களை ஏளனமாகப் பாரக்கும் வழக்கம் பரவிவிட்டது . எப்படி இவர்களிடம் பண்பாட்டை மட்டும் எதிர்பார்ப்பது?
தமிழில் பெயர் வைத்தாலேயே ஒரு படத்திற்கு வரிச் சலுகை கிடைக்கிறது. அப்படி அறிவித்த கலைஞரால் தமிழ் நாட்டு FM களையும் தொலைக்காட்சிகளையும் சகித்துக்கொள்ள முடிகிறதா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி